தினமும் காலையில் எழுந்தவுடன், தனது கைகளை முதலில் பார்த்துக் கொள்ளவும். பின்பு, இறைவனை மனதால் துதி செய்யவும்.
கிழக்கு வெளுக்குதய்யா
கிளிகளெல்லாம் கூவுதய்யா
அன்னங்கள் பேசுதய்யா
அல்லியும் தாமரையும்
அலர்ந்து மலருதய்யா
ஆதி பகவானே அமுதுங்க வாருமைய்யா
பொழுதும் விடிந்தது, பூவும் மலர்ந்தது
சிவனும் வந்தார், பலனும் தந்தார்
குளித்தவுடன் சொல்லவேண்டியது:
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே
என்ற திருஞானசம்பந்தர் பாடலை பாடி திருநீறு அணியவும்.
No comments:
Post a Comment